தேவதானப்பட்டி: தமிழகத்தில் 50 இடங்களில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்ட உள்ளது என மஹோன்னத பாரதம் டிரஸ்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி சத்யாகிரக சேவாஸ்ரமத்தில் 41 அடி விஸ்வரூப ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இரண்டாம் கால ஹோமங்கள், கணபதி ஹோமம், நாடி சந்தானம், தச தரிசனம், கோ பூஜை, வேதபாராயணம், மஹா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, மஹாகும்பாபிஷேகம் நடந்தது. ஆஞ்சநேயருக்கு 2008 எண்ணிக்கையிலான மெகா வடைமாலை, 1008 எலுமிச்சை மாலை அணிவிக்கப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை புதுடில்லி மஹோன்னத பாரதம் டிரஸ்ட் தலைவர் ராஜாராம், மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயநாராயணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். மஹோன்னத பாரதம் டிரஸ்ட் தலைவர் ராஜாராம், மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயநாராயணன் கூறுகையில்: தமிழகத்தில் 51 இடங்களில் ஆஞ்சநேயர் சிலை வைக்க உள்ளோம். முதல் கட்டமாக நேற்று செங்குத்து பட்டியில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.கோட்டையில் கட்டுமானப் பணி நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் தூசி பகுதியில் பணி நடக்க உள்ளது. என்றனர்.