அன்னூர்: முதலிபாளையம், மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது.
காட்டம்பட்டி அருகே முதலிபாளையத்தில் பழமையான மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில் வளாகத்தில், திருநாகேஸ்வரர், முருகன், கருப்பராயர், கன்னிமார், விநாயகர் ஆகிய தெய்வங்கள் வீற்றிருக்கின்றன. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதை அடுத்து மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் அருளுரை வழங்கினார். ஊராட்சித் துணைத் தலைவர் மதியழகன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாரியம்மன் மற்றும் மாகாளியம்மனுக்கு அபிஷேக பூஜை அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.