பதிவு செய்த நாள்
26
ஜூன்
2023
10:06
புதுச்சேரி: மீனவர் வலையில் சிக்கிய உடைந்த பெருமாள் கற்சிலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுச்சேரி, சின்ன காலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராமச்சந்திரன். இவர், தன் மகன்கள் ரபின், ராபர்ட் ஆகியோருடன் நேற்று காலை, பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். கரையில் இருந்து, 1.5 கி.மீ., துாரத்தில் மீன் பிடித்தபோது, அவரது வலையில் பெருமாள் கற்சிலையின் உடைந்த தலை பாகம் சிக்கியது. கரைக்கு கொண்டு வந்த ராமச்சந்திரன், காலாப்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார். ராமச்சந்திரன் கூறுகையில், 30 ஆண்டுகளாக மீன்பிடி தொழில் செய்கிறேன். என் முன்னோர், கடலில் 1.5 கி.மீ., துாரத்தில் மலை போன்ற வடிவில் கோவில் இருந்ததாக கூறியுள்ளனர். அந்த இடத்தில் வலை வீசிய போது பல முறை வலை கிழிந்துள்ளது. அப்போது அதை கண்டுகொள்ளவில்லை. நேற்று வலையில் மீன்களுடன், உடைந்த பெருமாள்கற்சிலையின் தலை பாகம் கிடைத்தது, என்றார்.