செங்கல்பட்டு : தமிழகமெங்கும் பிரதி மாதம் நான்காவது ஞாயிறு உழவாரப்பணி & விழிப்புணர்வு மேற்கொள்ளும் சென்னை அம்பத்தூர் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் உழவாரப்பணி மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது.
முதல் நிகழ்வாக பக்தகோடிகளிடையே திருக்கோயில்களின் தூய்மை முக்கியத்துவத்தை மற்றும் பாதுகாப்பு நலன்கள் குறித்து கயிலாய வாத்தியங்கள் முழங்க பதாகைகள் ஏந்தி பிரச்சுரங்கள் வழங்கி விழிப்புணர்வு நடைபெற்றது. தொடர்ந்து திருக்கோயில் நந்தவனப் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது மற்றும் பக்த கோடிகளுடைய பிளாஸ்டிக் ஒழிப்பு வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட துணிப்பை வழங்கப்பட்டது. கந்தசாமி திருக்கோயில் உள் பிரகாரங்கள் வெளி பிரகாரங்கள் திருக்குளப் பகுதி நந்தவனம், மண்டபம், பக்தர்கள் ஓய்வு விடுதி, மற்றும் உபகோயில்களான மலைக்கோயில் கைலாசநாதர் மற்றும் சிதம்பரம் சுவாமிகள் திருமடம், விநாயகர் கோயில் பகுதிகளில் உழவாரப்பணி தூய்மை நடைபெற்றது இதில் 300-க்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்து கொண்டனர். மாலை 4மணிக்கு உலக நலன் வேண்டி திருமுறை பாராயணம் பாடி அடியார்கள் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. வருகின்ற ஜூலை மாதம் உழவாரப்பணி விழிப்புணர்வு தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் கங்கைகொண்டசோழபுரம் மற்றும் திருவையாறு அப்பர் கயிலை காட்சி தன்னார்வப் பணி சிறப்பாக நடைபெற உள்ளது.