ஆஞ்சநேயர் என்றாலே வால் தான் அழகு. வால் இல்லாத ஆஞ்சநேயரைத் தரிசிக்க வேண்டுமா! வாருங்கள் ராமேஸ்வரம் அபயஆஞ்சநேயர் கோயிலுக்கு!
தல வரலாறு: ராவணனை கொன்ற பாவம் தீர ராமர் ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய முடிவுஎடுத்தார். இதற்காக லிங்கம் கொண்டு வர ஆஞ்சநேயர் கயிலை சென்றார். அவர் வருவதற்குள், சீதை ஒரு லிங்கம் வடித்தாள். ராமனும் அதற்கு பூஜை நடத்தினார். லிங்கத்துடன் வந்த ஆஞ்சநேயர் வருத்தம்அடைந்தார். மணல் லிங்கத்தை தனது வாலினால் சுற்றி இழுத்தபோது அதை அசைக்க முடியவில்லை. சிவஅபச்சாரம் செய்ததை எண்ணி வருந்தினார். ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றார். லிங்கத்தைப் பெயர்க்க முயன்றபோது வால் அறுந்ததன் அடிப்படையில், இக்கோயிலில் ஆஞ்சநேயர் வால் இல்லாமல் காட்சி தருகிறார். இந்த அனுமன் கடல் மண்ணால் ஆனவர்.
அத்தி மர அனுமன்: மூலஸ்தானம் எட்டு பட்டைகளுடன் கூடிய விமானத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், கல் வடிவ ஆஞ்சநேயரும், அத்திமரத்தால் ஆன அனுமனும் உள்ளனர். கல் சிலையில் வால் இல்லை. இவர் அஞ்சலிஹஸ்த நிலையில் வணங்கிய கோலத்தில் உள்ளார். இவரது அருகிலுள்ள அத்திமர அனுமனை ‘நரசிம்ம ஆஞ்சநேயர்’ என்கின்றனர். இவர் அபயஹஸ்த நிலையில் பக்தர்களுக்கு அருளும் கோலத்தில் உள்ளார். இரணியனை வதம் செய்த நரசிம்மர், குளிர்ச்சிக்காக ஒரு அத்தி மரத்தில் புகுந்து கொண்டார். அத்தி மரம் நரசிம்மரின் அம்சமாக கருதப்படுகிறது. எனவே அத்திமர ஆஞ்சநேயரை‘நரசிம்ம ஆஞ்சநேயர்’ என்று அழைக்கிறார்கள். ஆஞ்சநேயரின் பீடத்திற்கு கீழே 12 கோடி‘ராம ரக்ஷா’ மந்திர எழுத்துக்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுஇருக்கிறது.
மூன்று அபிஷேகம்: ‘ஆஞ்சநேயர் தீர்த்தம்’ கோயிலுக்கு பின்புறம் உள்ளது. கோயில் வளாகத்தில் கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயரும் காட்சி தருகிறார். இவருக்கும் வால் கிடையாது. இந்த ஆஞ்சநேயர் சிலையில், கடல் சிப்பிகள் பதிந்திருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம்.தலவிருட்சமான அத்தி மரத்தில், பக்தர்கள் கோரிக்கைநிறைவேற இளநீர் காய்களை கட்டுகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர்.
திறக்கும் நேரம்: காலை 6.00 1.00, மாலை 3.00 இரவு 8.00.
இருப்பிடம்: ராமேஸ்வரம்ராமநாதசுவாமி கோயில் மேற்கு வாசல் பஸ் ஸ்டாப்பில் இருந்து 2 கி.மீ.,