Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்: ... திருக்கோட்டியூரில் மூலவருக்கு தைலப் பிரதிஷ்டை: பிரதான ஹோமம் துவக்கம் திருக்கோட்டியூரில் மூலவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்: சரியான நேரத்தில் தரிசன விழா.. பக்தர்கள் வியப்பு
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்: சரியான நேரத்தில் தரிசன விழா.. பக்தர்கள் வியப்பு

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2023
11:06

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனிதிருமஞ்சன தரிசன விழா நேற்று சரியான நேரத்தில் நடந்து முடிந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது உலக புகழ் பெற்ற நடராஜர் கோவில் பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் இக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாயஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலில், ஆனித் திருமஞ்சன தரிசன விழா ஆனித் திருமஞ்சன தரிசன விழா, கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது அதனை தொடர்ந்து 10 நாட்களும், காலை, மாலை வேளைகளிலும் பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது. 21 ஆம் தேதி தெருவடைச்சான் உற்சவமும், 24ம் தேதி தங்கத்தேர் உற்சவமும் நடைபெற்றது முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

தொடர்ந்து நேற்று ஆனிதிருமஞ்சன தரிசன விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் தரிசன விழாவையொட்டி தேரில் இருந்து நேற்று முன்தினம் இறங்கிய ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் ஸமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து ஏககால லட்சார்ச்சனை நடந்தது நேற்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடந்தது. பின்னர் 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேதே ஸ்ரீ நடராஜமூர்த்தி சுவாமி திருவாபரண அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து 12 கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வீதியுலா முடிந்து 1:30 மணி அளவில் ஆயிரம் கால் மண்டபத்திற்கு வந்தது. அதனை தொடர்ந்து பிற்பகல் 2.10 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து வெளியில் வந்த ஸ்ரீ நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனம் ஆடியபடியே பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தனர். தொடர்ந்து நடனமாடிபடியே தரிசனம் நடந்த சுவாமி சித்சபா பிரவேசம் செய்தனர். தரிசன விழாவில் பங்கேற்ற பல்லாயிரக்காண பக்தர்கள் சிவ சிவ கோஷத்துடன் பயபக்தியோடு சுவாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை நடராஜர் கோயில் செயலாளர் சிவராம தீட்சிதர், மற்றும் பொது தீட்சிதர்கள் செய்தனர்.

விழாவையொட்டி கடலூர் மாவட்ட எஸ்.பி. ராஜாராம். சிதம்பரம் டி.எஸ்.பி. ரகுபதி முன்னிலையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் ஆனித் திருமஞ்சன தரிசனத்தையோட்டி, ஐயப்பா சேவா சங்கம், ஸ்ரீ நடராஜ பெருமான் ஆலய சோழ வம்சாவழி சமூக ஆன்மீக அன்னதான அறக்கட்டளை, வன்னியர் அறக்கட்டளை விஸ்வகர்ம சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இன்று பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் நிறைவடைகிறது. 10 ஆண்டுகளில் இன்றுதான் சரியான நேரத்திற்கு தரிசனம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு இரு முறை தரிசன உற்சவம் நடக்கிறது. கோவில் சார்பில் வழங்கப்படும் விழா அழைப்பிதழில் 2 மணிக்கு மேல் தரிசனம் என குறிப்பிட்டிருக்கும். ஆனால், சுமார் கடந்த 10 ஆண்டுகளாக 4 அல்லது 5 மணிக்கு மேல்தான் தரிசனம் நடக்கும். சில சமயம் 6 மணிக்கு நடந்ததும் உண்டு விழா குறித்து ஆலோசனை கூட்டத்தில். தீட்சிதர்களிடம் வலியுறுத்தியும், சரி சிரி என தலை ஆட்டி செல்லும் தீட்சிதர்கள் அவர்கள் விருப்பப்படியே தரிசன விழாவை தாமதமாகவே நடத்துவர். காலை 11 மணியிலிருந்தே கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள், நீண்ட நேரம் உள்ளே மாட்டிக்கொண்டு பெரிதும் பாதிப்படைந்து வந்தனர். முதியோர்களின் வேதனை சொல்லி மாளாது. குறித்த நேரத்தில் தரிசனம் நடத்த பல்வேறு தரப்பினர் புகார் மனு அனுப்பி வந்தனர். இந்த முறை யாரும் எதிர்பாராத வகையில் 2.10 மணிக்கு தரிசன விழாவை முடித்தது பக்தர்களுக்கு ஆச்சிரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது இனி வரும் காலங்களில் தீட்சிதர்கள் தெரிவிப்பது போல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் தரிசனத்தை முடித்தால் பக்தர்களின் சிரமங்கள் குறையும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு,பெருவுடயாருக்கு ஆயிரம் கிலோ அரிசி மற்றும் 500 ... மேலும்
 
temple news
அரியலூர் ; கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த  அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் வெகு ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar