திருக்கோட்டியூரில் மூலவருக்கு தைலப் பிரதிஷ்டை: பிரதான ஹோமம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2023 12:06
திருக்ககோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் பெரிய பெருமாள் மூலவருக்கு தைப்பிரதிஷ்டை மகோத்ஸவ யாகசாலை பூஜைகள் துவங்கின.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் கடந்த 2010 ல் மூலவருக்கு ‛ஜ்யேஷ்டாபிஷேக த்ருவ தைலப்ரதிஷ்டை’ நடந்தது. மூலவருக்கு தைலக்காப்பு சாத்தி 48 நாட்களுக்கு பின்னரே கலைக்கப்படும். நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜைக்கு ஆச்சார்யர் அழைப்பு உள்ளிட்ட பூர்வாங்கப் பணிகள் நடந்தன. நேற்று காலை 9:30 மணிக்கு யோக நரசிம்மர் சன்னதியில், ஆதிசேஷ வாகன கடத்திற்கு முன்பாக கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து பட்டச்சார்யர்களால் மகா சாந்தி ஹோமம், பிரதான ஹோமங்கள் நடந்தன. பின்னர் பூர்ணாகுதி தீபராதனை நடந்தது. தொடர்ந்து மாலையிலும் ஹோமங்கள் நடந்து, இரவில் பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இன்று தைலம் திருவீதி புறப்பாடாகி யாகசாலையில் பிரதிஷ்டை செய்யப்படும். ஜூன் 29 ல் காலை 9:21 மணிக்கு மேல் 10:46 மணிக்குள் தைலப்பிரதிஷ்டை மகோத்ஸவம் நடைபெறும்.