Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » ஜகன்மித்திரர்
ஜகன்மித்திரர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 அக்
2012
15:56

பாண்டுரங்கன் அருளாட்சி புரியும் பண்டரிபுரம் அருகில் பாராளி என்னும் சிற்றூர் இருந்தது. அங்கு ஜகன்மித்திரர் என்பவர் வாழ்ந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் தெரியவில்லை. தன்னை நாடியவர்க்கெல்லாம் நன்மை செய்து வந்ததால் உலகத்தின் நண்பர் என்ற பொருளில், ஜகன்மித்திரர் (ஜகம்-உலகம், மித்திரர்-நண்பர்)எனப்பட்டார். பாண்டுரங்கன் மீது அவர் அளவில்லாத பக்தி கொண்டிருந்தார். பாகவதர்களுக்கு அன்னதானம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். தன்னிடம் இருந்த செல்வம் அனைத்தையும் வறியவர்களுக்கு வாரி வழங்கினார். சுயநலமில்லாமல் பிறருக்கு நன்மை செய்த இவரது புகழ் பரவியது. இதனை உள்ளூர்வாசிகள் சிலரால் தாங்க முடியவில்லை. ஞானமில்லாத அவர்கள் மனதில் பொறாமைத்தீ எரிந்தது. வேதம் படித்த அவர்கள், ஜகன்மித்திரரை வாதப்போருக்கு அழைத்தனர். சண்டையை சிறிதும் விரும்பாத ஜகன்மித்திரர், பக்திக்கும் வாக்குவாதத்திற்கும் வெகுதூரம். அன்பிருக்கும் இடமே ஆண்டவன் குடியிருக்கும் கோயில், என்று விளக்கம் தந்து புறப்பட்டார். மக்கள் மத்தியில் ஜகன்மித்திரரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த நினைத்த எதிரிகளின் திட்டம் எடுபடவில்லை. இருந்தாலும், என்றாவது ஒருநாள் ஜகன்மித்திரரை பழிதீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் விடவே இல்லை.

கபீர்தாசர், நாமதேவர் போன்ற மகான்களின் வாழ்க்கை வரலாற்றை பிறருக்கு எடுத்துச் சொல்வதையும், பஜனைப்பாடல்களைப் பாடி பாண்டுரங்களைப் போற்றுவதையும் மித்திரர் தனது கடமையாகக் கொண்டிருந்தார். ஒருநாள் இரவு, வீட்டில் நாமசங்கீர்த்தனம் நடந்து கொண்டிருந்தது. எதிரிகள் முகமூடியுடன் வந்து, கூரையில் தீ வைத்து விட்டு ஓட்டம் பிடித்தனர். பக்தனுக்கு நேர்ந்த துன்பத்தை பாண்டுரங்கனால் பொறுக்க முடியவில்லை. சுதர்சன சக்கரத்தை அனுப்பி நெருப்பால்ஏற்பட்ட பாதிப்பைத் தடுத்தார். ஊரே இதைக் கண்டு வியந்து போனது. ஜகன்மித்திரரின் பக்தி திறத்தைக் கண்ட செல்வந்தர்கள் பலர், தங்கள் சொத்துக்களை அவரின் பெயருக்கு சாசனமாக எழுதிவைத்து தானதர்மம் செய்யும் படி வேண்டினர். அந்நாட்டு மன்னனும் இதற்கு அனுமதியளித்து உத்தர விட்டான். வருமானம் உயரத் தொடங்கியதால், ஜகன்மித்திரர் திருக்கோயில் திருப்பணி, அன்னதானம் ஆகியவற்றை இன்னும் விரிவுபடுத்தினார். ஆனால், மீண்டும் சோதனை தொடங்கியது. பண்டரிபுரத்தை ஆண்டு வந்த மன்னன், நவாப் ஒருவனிடம் தோற்றுப் போனான். ஆட்சி மாறியதால், எதிரிகளின் கொட்டம் தலை தூக்கியது. அவர்கள் நவாப்பிடம், பக்தியின் பெயரால் ஜகன்மித்திரர் பலரையும் வஞ்சித்து சொத்துக்களை அபகரித்ததாக புகார் அளித்தனர். அவர்களின் நயவஞ்சகப் பேச்சை நவாப்பும் நம்பினான். ஜகன்மித்திரர் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.

நவாப் அவரிடம், சுவாமி, தாங்கள் பெரிய பக்தர் என்பதையும், ஊரார் சொத்துக்களை எல்லாம் சாசனம் பெற்றுக் கொண்டு தர்ம கைங்கர்யம் செய்வது பற்றியும் கேள்விப்பட்டேன். உங்களால் எனக்கும் ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. எங்கள் குலதெய்வ பூஜைக்குப் புலிப்பால் வேண்டும். காட்டிற்குச் சென்று பெண்புலியை அழைத்து வாருங்கள். இதற்கு தகுதியான நபர் நீங்கள் ஒருவரே என்பதால் உங்கள் உதவியை நாடியுள்ளேன், என்றான். பாண்டுரங்கனின் நாமத்தை ஜெபித்தபடி தனியாளாக ஜகன்மித்திரர் காட்டிற்குப் புறப்பட்டார். ஒரு பாறையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். பாண்டுரங்கனே அவர் முன் காட்சியளித்தார். ஒரு பெண்புலியாக உருவெடுத்து ஜகன்மித்திரருடன் வந்தார். புலியுடன் ஜகன்மித்திரர் வீதியில் வருவதைக் கண்ட மக்கள், வீட்டிற்குள் ஓடி மறைந்தனர். அரண்மனை வாசலை அடைந்ததும், புலி பயங்கரமாக உறுமியது. நவாப்பும் மற்றவர்களும் செய்வதறியாமல் ஓடி ஒளிந்தனர். நவாப்! ஏன் பயப்படுகிறீர்கள்? நீங்கள் தானே புலி வேண்டுமென கேட்டீர்கள்! தேவையான பாலை எடுத்துக் கொள்ளுங்கள், வாருங்கள்,என்று அழைத்தார். நவாப் நடுக்கத்துடன், சுவாமி! என்னை மன்னித்து விடுங்கள். வஞ்சகம் படைத்த கயவர்களின் பேச்சைக் கேட்டு ஏமாந்துவிட்டேன். உங்களின் பெருமையை உணராமல் சிரமம் கொடுத்து விட்டேன். தயவுசெய்து புலியை காட்டிற்குள் விட்டு விடுங்கள், என்று மன்றாடினான். ஜகன்மித்திரர் நவாப்பின் வேண்டுகோளை ஏற்றார். அப்போது, மாயனாகிய பாண்டுரங்கன் தன் புலிவடிவை மறைத்து சங்கு சக்ரதாரியாக அருட்காட்சி அளித்தான். ஜகன்மித்திரருக்கு நவாப்பும் ஏராளமான பணம் தந்தான். பலகாலம் பாண்டுரங்கனைப் பாடி மகிழ்ந்த ஜகன்மித்திரர் அவரது திருவடியை அடைந்தார்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.