மயிலாடுதுறை: மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி ஹோமம் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை அருளும் சக்தி சொரூபமான இக் கோயிலுக்கு நாள்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்து செல்வது வழக்கம். இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் மகா சண்டி ஹோமம் நடந்தது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது தொடர்ந்து பட்டு வஸ்திரங்கள் இட்டு பூர்ணாஹூதி நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் மகா தீபாரதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.