பதிவு செய்த நாள்
28
ஜூன்
2023
12:06
ஜம்மு: இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஒத்திகை நடைபெற்றது.
கங்கைச் சடையன் சிவபெருமானுக்கு தென்னாட்டில் மட்டுமின்றி, வடநாட்டிலும் பல கோயில்கள் உள்ளன. அதில் உன்னதமான ஒரு சிவஸ்தலம் தெற்கு காஷ்மீர் பகுதியில் ஸ்ரீநகரில் உள்ள அமர்நாத் குகைக் கோயில். நெடிதுயர்ந்த இமயமலைத் தொடரில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 3888 மீட்டர் (12756 அடி) உயரத்தில் உள்ளது இந்தக் குகைக் கோயில். முழுவதும் பனி மூடி வெள்ளி ஜரிகை ஆடையைப் போர்த்தியது போன்ற விவரிக்க முடியாத அழகுடன் காட்சி அளிக்கிறது அடர்ந்த மலைத் தொடர். யாத்ரீகர்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் என, காவல்துறை பொதுமக்களுக்கு அரணாக நிற்கின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மொத்தம் 62 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு, பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து பக்தர்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.