Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளபட்டி கோயில் விழாவில் கத்தி ... அமர்நாத் யாத்திரை ஜூலை 1ல் துவக்கம்; பாதுகாப்பு ஒத்திகை அமர்நாத் யாத்திரை ஜூலை 1ல் துவக்கம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம பிரம்மோற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம பிரம்மோற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2023
11:06

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆனி மாத நரசிம்ம பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக துவங்கியது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோவிலில் ஆண்டுதோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும், நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான நரசிம்ம பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை முளையிடுதல் விழா நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணி முதல் 5:00 மணிக்குள், கொடியேற்ற விழா நடந்தது. விழாவின் இரண்டாம் நாளான இன்று இரவு, சிம்ம வாகனத்தில் உற்சவர் தெள்ளியசிங்கர் அருள்பாலிக்கிறார். நாளை, கருட சேவை உற்சவம் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் விழாவான ஜூலை, 1ம் தேதி காலை, பல்லக்கு நாச்சியார் திருக்கோலமும், மாலை யோக நரசிம்மன் திருக்கோல புறப்பாடும், இரவு அனுமந்த வாகன புறப்பாடும் நடக்கிறது. விழாவின் பிரதான நாளான, ஜூலை 3ம் தேதி, தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7:15 மணிக்கு, பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. இரவு தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது. ஜூலை 5ம் தேதி ஆளும் பல்லக்கு, தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. அன்று இரவு, அவரோஹணம் எனும் கொடியிறக்கத்துடன், விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar