பக்ரீத் பண்டிகை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2023 03:06
திருப்புவனம்: திருப்புவனம் வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகின. திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய் கிழமை நடைபெறும் சந்தையில் காலை பத்து மணி வரை ஆடு, கோழி, சேவல், வாத்து உள்ளிட்டவைகளும் அதன்பின் காய்கறிகளும் விற்பனை செய்யப்படும், கால்நடை சந்தையில் ஆடி, தீபாவளி, ரம்ஜான், பக்ரீத் மற்றும் திருவிழா காலங்களில் அதிகளவு ஆடு, கோழிகள் விற்பனையாகும், திருப்புவனம் சந்தையில் நாளை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் குர்பானி வழங்குவதற்காக ஆட்டு கிடா வாங்க குவிந்தனர். கடந்த வாரம் வரை 8 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட 10கிலோ எடை கொண்ட ஆடு 10 ஆயிரம்வரை விற்பனையானது. ஆட்டு கிடா குட்டிகள் அதிகளவில் விற்பனையானதால் தட்டுப்பாடு ஏற்பட்டது. வழக்கமாக 300 முதல் 500 ஆடுகள் வரை விற்பனையாகும் சந்தையில் நேற்று ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ஆட்டு குட்டிகள் விற்பனை செய்யப்பட்டதால் சந்தை களை கட்டியது. ஆட்டுகுட்டிகளை ஏற்றி செல்ல சரக்கு வாகனங்களும் அணிவகுத்ததால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.