காரைக்குடியில் எருமை ரத்தம் குடிக்கும் வினோத திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2023 03:06
காரைக்குடி: காரைக்குடியில், நரிக்குறவர் இன மக்கள் சார்பில் எருமை ரத்தம் குடிக்கும் வினோத திருவிழா நடந்தது.
காரைக்குடி அருகே உள்ள வேடன் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களின் காவல் தெய்வமான நரிவிழிகாளி, மதுரை வீரனுக்கு எருமை மற்றும் ஆடு வெட்டி பூஜை நடத்துவது வழக்கம். அதன்படி இவ்வாண்டு திருவிழா கடந்த ஜூன் 25ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் பெருமாள் பூஜையும் 26 ஆம் தேதி சாமி ஆட்டமும் நடந்தது. இதில் கழனிவாசல் இடைச்சியம்மன் கோயிலில் இருந்து பால்குடம், பறவை காவடி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்தி பக்தர்கள் கடன் செலுத்தினர். தொடர்ந்து நேற்று காலை காளி தெய்வத்திற்கு கிடா வெட்டும் பூஜை நடந்தது. இதில் 3 எருமைகளை காளிக்கு பலி கொடுத்து, எருமை ரத்தத்தை குடித்து மக்கள் வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து 65 ஆடுகள் வெட்டப்பட்டு இறைச்சிகளை அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.
வேடன் நகர் பகுதி மக்கள் கூறுகையில்; எருமை மாட்டை சாமிக்கு வெட்டி பனி கொடுத்து ரத்தத்தை குடித்தால் நோய் நொடி இன்றி தங்களது குடும்பம் கலைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் முன்னோர்கள் காலம் தெரட்டு காலம் காலமாக பூஜை நடந்து வருகிறது. என்றனர்.