பதிவு செய்த நாள்
30
ஜூன்
2023
05:06
நத்தம், நத்தம் அருகே கோட்டையூர் ஊராட்சி நல்லூர் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி நேற்று முன்தினம் முளைப்பாரி மற்றும் திருச்செந்தூர், ராமேஸ்வரம், திருமலைக்கேணி, அழகர் கோவில் மலை , காவிரி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து கணபதி பூஜையுடன் மூன்று கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று கடம் புறப்பாட்டை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கருடன் வானத்தில் வட்டமிட அதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீரும், பூஜை மலர்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் க் சிக்கந்தர் பாட்ஷா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், பழனிச்சாமி, நகரச் செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.