பதிவு செய்த நாள்
30
ஜூன்
2023
05:06
பல்லடம்: பல்லடம் அருகே, நெல்லிக்குப்பம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. பல்லடம் அடுத்த, சின்ன வதம்பச்சேரி கிராமத்தில், ஸ்ரீ ராமலிங்க சமேத நெல்லுக்குப்பம்மன் கோவில் உள்ளது. கோவிலின், 3ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக, ஜூன் 25 அன்று காலை, 9.00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி,, துர்கா, லட்சுமி, நவக்கிரக ஹோமங்களுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மறுநாள், கோ பூஜை, அன்னபூரணி பூஜை, முளைப்பாலிகை ஊர்வலம் ஆகியவை நடைபெற்றன. ஜூன் 27 அன்று யாக சாலை போடுவாங்க பூஜை, சிவ சூரிய பூஜை, முதல், இரண்டு மற்றும் மூன்றாம் கால வேள்வி வழிபாடுகள் நடந்தன. நேற்று, நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் கால வேள்வி, சீர் எடுத்து வருதல் நிகழ்வுகள் நடைபெற்றன. காலை, 9.20 மணிக்கு மேல், ராஜகோபுரம், பரிவார தெய்வ கோபுரங்களை தொடர்ந்து, மூலஸ்தான கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. புளியம்பட்டி பாலுசாமி சாஸ்திரிகள், மற்றும் குழுவினர் கும்பாபிஷேக விழாவை நடத்திக் கொடுத்தனர். சிறப்பு அலங்காரத்தில் நெல்லுக்குப்பம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.