கோவை : கோவை காந்தி பார்க் அருகே இருக்கும் அருள்மிகு வேணுகோபால சுவாமி கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பாமா ருக்மணி சமேதராய் தங்கக்காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.