வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2023 10:07
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் பெருந்தேவித் தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று நடந்த திருத்தேர் வீதி உலாவில் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.