மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பஞ்ச மூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2023 03:07
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பஞ்சமூர்த்தி சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோயிலில் உள்ள விநாயகர், மீனாட்சி, சொக்கநாதர், முருகன், வள்ளி, தெய்வானை, சண்டிகேஸ்வரர் சாமிகளுக்கு 11 வகையான வாசனை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பஞ்ச மூர்த்தி சாமிகளுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.