இவர்களுக்கு கால நேரம் பார்க்காமல் தான தர்மம் செய்யலாம் என்கிறது சாஸ்திரம். அவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வோமா * வேலையே செய்ய முடியாதவர்கள் * உடல் ஊனமுற்றோர்கள் * புத்தி தடுமாறியவர்கள் * வயதானவர்கள் * பெற்றோர்களை இழந்த குழந்தைகள் * தன்மானம் இழந்து வாய்விட்டு பிச்சை என கேட்பவர்கள் இவர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை தானமாக வழங்கலாம். எந்த காரணத்தை கொண்டும் வீட்டை துாய்மை பயன்படுத்தும் துடைப்பத்தை தானம் கொடுத்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்காது. கிழிந்தபுத்தகங்களை கொடுத்தால் கல்வியில் தடை ஏற்படும். பயன்படுத்திய எண்ணெய்யில் சனி பகவான் வசிக்கிறார். இதை தானம் செய்வதால் அவருடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதனால் இம்மூன்றினையும் தானம் செய்யும் பொருட்களோடு சேர்க்க கூடாது.