சாவன் மாதம் துவக்கம்: வட மாநிலங்களில் பக்தர்கள் சிவ பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2023 12:07
சிவபெருமானுக்கு உரிய சாவன் மாதம் இன்று துவங்கியது. வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம் சாவன் என்று அழைக்கப்படும் இம்மாதம் ஆகும். கங்கையிலிருந்து, புனித நீரெடுத்து வந்து தங்களது ஊரில் சிவன் கோவிலில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது இவர்களுக்கு வழக்கம். அதன்படி மாதத்தின் முதல் நாளான இன்று வடமாநிலங்களில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.