குரு பூர்ணிமா: அமெரிக்காவில் 10 ஆயிரம் பேர் பகவத் கீதை படித்து பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2023 12:07
டெக்சாஸ் : குரு பூர்ணிமாவை முன்னிட்டு அமெரிக்காவில் பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆலன் கிழக்கு மையத்தில் பகவத் கீதை உச்சரிக்கும் நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை மொத்தம் 10,000பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை யோகா சங்கீதா மற்றும் எஸ்ஜிஎஸ் கீதா பவுண்டேஷன் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. குரு பூர்ணிமாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்ற ஆன்மீக சுவாமிகளான பூஜ்ய கணபதி, சச்சிதானந்த ஜி தலைமையில் நடைபெற்றது. குரு பூர்ணிமாவை முன்னிட்டு அமெரிக்காவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டு பகவத் கீதை படித்து பரவச படுத்தினர்.