ஷாகாம்பரி உற்சவம்: விஜயவாடா துர்கா மல்லேஸ்வர சுவாமிக்கு சீர் வரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2023 12:07
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் ஆந்திர மாநிலம் விஜயவாடா கனகதுர்கை அம்மன் கோயிலில் நடந்த ஷாகாம்பரி உற்சவத்தை யொட்டி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி கே.வி.சாகர்பாபு தம்பதியினர் விஜயவாடா ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமிக்கு சீர் வரிசை பொருட்கள் பட்டுப்புடவை வழங்கினர்.
முன்னதாக ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ராம்பாபு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா ஆகியோர் சிறப்பான முறையில் வரவேற்றனர். பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அங்கிருந்து கனகதுர்கம்மாவிற்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர ஸ்வாமி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு மற்றும் தேவஸ்தான அதிகாரி கே.வி.சாகர்பாபு மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மேள தாளங்களுடன் தலைமீது சுமந்துச் சென்று (சீர் வரிசை பொருட்களை )ஊர்வலமாக கோயிலுக்குள் சென்றனர். வேத பண்டிதர்களின் ஆசீர்வாதத்துடன், ஸ்ரீகாளஹஸ்தி சுவாமி அம்மையார்களின் திருவுருவப் படமும், தீர்த்தப் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. ஷாகாம்பரி விழாவையொட்டி கனகதுர்கம்மையனுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கியதை தொடர்ந்து அம்மனை தரிசனம் செய்தனர். (ஆஷாட)தெலுங்கு ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு சாகம்பரி சேவை ஆந்திர மாநில அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதனால் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர ஸ்வாமி தேவஸ்தானம் சார்பில் கனகதுர்கம்மனுக்கு பூஜை பொருட்கள் (சீர் வரிசை)வழங்கப்பட்டது. இதில் அஞ்சூரு சீனிவாசலு பேசுகையில் அன்னை கனகதுர்கை அம்மாவின் அருள் மாநில மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று மனதார அம்மனை வேண்டி வந்ததாக கூறினார்.