ஜெகன்னாத பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2023 04:07
திருமழிசை:திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகன்னாத பெருமாள் கோவில். இங்கு இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவ திருவிழா, 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கருட சேவை 29ல் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேர்த்திருவிழா நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு ஜெகன்னாத பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை 9:00 மணிக்கு, தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மதியம் 1:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. வரும் 5ல் கொடிஇறக்கத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறும்.