திரவுபதி அம்மன் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2023 04:07
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் குளம், உரிய பராமரிப்பு இன்றி இருந்தது. அதை துாய்மைப்படுத்தி, நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில், அதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து, 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று காலை 10:30 மணிக்கு, சீரமைப்பு பணிக்கு பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக், துணைத் தலைவர் லோகநாதன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இந்த பணிகள், இன்னும் இரண்டு மாதத்திற்குள் நிறைவு பெற்று, கோவில் குளம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.