மேலுர்: கிடாரிப்பட்டியில் பெரியநாச்சியம்மன் கோயில் வீடு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 2 யாகசாலபூஜைகள் துவங்கியது. இரண்டாம்கால யாசசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். பிறகு சுவாமிக்கு சிறப்பு அபிலேஷகம் மற்றும் தீபாரனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிடாரிப்பட்டி, உப்போடைப்பட்டி, சண்முகநாதபுரம், அ.வல்லாளபட்டி பக்தர்கள் கலந்து கொண்டனர்.