நெற்குப்பை: திருப்புத்தூர் அருகே ஆ.தெக்கூரில் கொட்டும் மழையிலும் கிராமத்தினர் உற்சாகமாக புரவி எடுத்தனர்.
திருப்புத்தூர் ஒன்றியம் ஆ.தெக்கூர் பச்சை மூங்கிலுடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு காப்புக்கட்டப்பட்டு, சேங்கை வெட்டி, பிடிமண் அளிக்கப்பட்டது. ஓமப்பொட்டலில் தயாரிக்கப்பட்ட புரவிகளுக்கு மலர்மாலைகளால்அலங்கரிக்கப்பட்டு பூஜைகள்,தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சாமியாடி அழைப்பு முடிந்து புரவிகள், காளைகள் உள்ளிட்டவைகளை ஊர்வலமாக கிராமத்தினர் எடுத்து வந்தனர். நூற்றுக்கணக்கான குதிரை,காளைகள் புரவிப்பொட்டலில் சேர்க்கப்பட்டன. ஊர்வலத்தினர் போது மழை பெய்த போதும் கிராமத்தினர் ஊர்வலத்தை நிறுத்தாமல் உற்சாகமாக சென்றனர். தொடர்ந்து புரவிகளுக்கு சிறப்பு தீபராதனை ந டந்தது. நேற்று மாலை மீண்டும் புரவிகள்,காளைகளை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுவுப்பட்டன. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.