பதிவு செய்த நாள்
04
ஜூலை
2023
04:07
கொடைக்கானல், கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சுருதியில் குரு பூர்ணிமா விழா நடந்தது. மனிதர்களுக்கு ஆசனாகவும், இறையாகவும் திகழும் குருவை போற்றி நன்றி கூறும் நாளாக குரு பூர்ணிமா தினம் உலகம் முழுவதும் சாய் பாபா பக்தர்களால் அனுசரிக்கப்படுகிறது. விழாவில் ஒங்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், கொடியேற்றுதலுடன் விழா தொடங்கியது. பஜனைகள், சத்சங்கம் மற்றும் ஆராத்தியுடன் நிகழ்வு நிறைவடைந்தது. டி.வி.எஸ்., குழும தலைவர் வேணு சீனிவாசன், நிர்வாக இயக்குனர் சுதர்சன், மாநில துணைத் தலைவர் விஜயகிருஷ்ணா,நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாய கண்ணன், டி.எஸ்.பி., மதுமதி கலந்து கொண்டனர். விழாவில் 4 ஆயிரத்து 500 பேருக்கு வஸ்திரதானம் கம்பளம் வழங்குதல், நாராயண சேவை எனும் அன்னதானம், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நோட், புக் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தமிழ் நாடு சத்ய சாய் சேவா நிறுவன அங்கத்தினர் செய்திருந்தனர்.