தொண்டாலை மேலக்கரை தர்ம முனியய்யா கோயிலில் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2023 05:07
கீழக்கரை: மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட தொண்டாலை மேலக்கரை தர்ம முனியய்யா கோயிலில் கடந்தாண்டு ஜூன் 17 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. ஓராண்டு நிறைவை முன்னிட்டு வருடாபிஷேக விழா இன்று காலை 6:00 மணி அளவில் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. கும்பங்களில் புனித நீர் ஊற்றி கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, சுதர்சன ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்டவைகள் நடந்தது. காலை 10:00 மணி அளவில் மூலவர் தர்மமுனியய்யா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பூஜைகளை விஜயராகவன் அய்யங்கார், கஸ்தூரி ரங்கன் ஐயங்கார் ஆகியோர் செய்திருந்தனர். ஏற்பாடுகளை (ஓய்வு) எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் மற்றும் தொண்டாலை மேலக்கரை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானமும், பதநீரும் வழங்கப்பட்டது.