சிவகாசி: சிவகாசி சித்துராஜபுரம் பாலாஜி நகரில் உள்ள வெற்றி விநாயகர் கோயில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலையில் கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம், ஜெபங்கள், மூல மந்திர ஹோமங்கள், மகா பூர்ணாஹீகுதி, சகல அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.