பதிவு செய்த நாள்
05
ஜூலை
2023
03:07
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நாடு முழுவதும் விஜய யாத்திரையை துவக்கியுள்ளார். இதன்படி, திருமடங்களில் தங்கி, சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்துகிறார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு கமலாலயம், ஆந்திரா - அனந்தப்பூர் அபயாஞ்சநேய சுவாமி கோவில் ,கர்னுால் ஸ்ரீசங்கரா மந்திர் மற்றும் மகாவித்யா பீடம் ,தெலுங்கானாவில் வாரங்கல் ஸ்ரீகாஞ்சி பீடம் ஸ்ரீவித்யா சரஸ்வதி கோவில், நிஜாமாபாத் கன்னிகா பரமேஸ்வரி கோவில். நிர்மல் பிராமண சேவா சங்க கல்யாண மண்டபம், அதிலாபாத் ராமாலயம் ,மகாராஷ்டிரா, நாக்பூர் ராம்நகரில் உள்ள பகவத்பாத சபா ஆகிய இடங்களில் சிறப்பு பூஜை நடத்தினார். பின்னர் உத்தரபிரதேச மாநிலம் சென்ற சுவாமிகள், விஜய யாத்திரையின் முக்கிய நிகழ்வான, வியாச பூஜை மற்றும், சதுர்மாஸ்ய விரத பூஜைகளை நடத்தி வருகிறார். ஜூலை 6ம் தேதி முதல் செப்., 29ம் தேதி வரை, காசியில் , ஹனுமன்கட்டில் உள்ள, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் கிளையில் தங்கி, அருளாசி வழங்குகிறார். விஜய யாத்திரையின் முக்கியத்துவம் பெற்ற வழிபாடாக கருதப்படும், சாதுர்மாஸ்ய விரதம் பூஜைகளை மேற்கொண்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்க இருக்கிறார். -எல்.முருகராஜ்