எழுமலை: எழுமலை வாசிமலையான் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை 3 காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. ஜூலை 4 ல் இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இன்று காலை 7.00 மணியளவில் துவங்கிய நான்காம் கால பூஜைகளைத் தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் தீபாராதனை வழிபாடுகள், அன்னதானம் நடைபெற்றது. எழுமலை அனைத்து சமுதாய பொதுமக்கள், 18 பட்டி கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.