திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2023 04:07
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி பிரமோற்சவ திருவிழா ஜூன் 27 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சிம்ம, சேச ,கருட குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. முன்னதாக தேரில் நின்றநாராயணப்பெருமாள் செங்கமலத்தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவகாசி, திருத்தங்கல் சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமிகள் எழுந்தருளிய தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக பெண்கள் கோலாட்டம் ஆடி சென்றனர். பா.ஜ., சமூக ஆர்வலர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.