அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2023 04:07
சூலூர்: அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, ஆனி மாத திருவிழா கடந்த, 2 ம்தேதி துவங்கியது. 3 ம்தேதி அக்னி கம்பம் நடப்பட்டு, பக்தர் தினமும் கம்பம் சுற்றி ஆடினர். நேற்று அம்மை அழைத்தல் நடந்தது. இரவு நடந்த கரகாட்டம், காவடி ஆட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று ஆடினர். இன்று பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு மற்றும் அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு, பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அலங்கார தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலங்கல் கந்தன் வேலன் குழுவினரின் வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.