அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்கிபட்டியில் சிங்கம் பிடாரி சேவுகபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று காலை 2ம் கால யாக பூஜையை தொடந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பங்காளிகள் செய்திருந்தனர்.