பதிவு செய்த நாள்
05
ஜூலை
2023
05:07
நெற்குப்பை: திருப்புத்தூர் ஒன்றியம் துவாரில் பூரண புஷ்கலை உடனாய வள்ளிநாயக சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சுவாமி, அம்பாள், இரட்டை விநாயகர், சித்தி விநாயகர், சுப்பிரமணியர், செங்கிடாய் கருப்பர், முத்துக்கருப்பர் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளுக்கும் திருப்பணி நடந்து, யாகசாலை பூஜைகள் ஜூலை 3ல் துவங்கியது. இன்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜைகள் துவங்கியது. தொடர்ந்து காலை 9:20 மணிக்கு கடங்கள் புறப்பட்டு விமான, கோபுரங்களுக்கு சென்றது. பின்னர் காலை 9:40 மணிக்கு கோபுர, விமான கலசங்களுக்கு சிவாச்சார்யர்களால் கும்பாபிஷேகம் நடந்தது. திரளாக சுற்று வட்டாரக் கிராமத்தினர் கும்பாபிஷேகத்தை தரிசித்தனர். பின்னர் காலை 10:05 மணிக்கு மூலவர் சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், தொடர்ந்து மகா அபிஷேகமும் நடந்தது. அமைச்சர்கள் பெரிய கருப்பன், ரகுபதி, ராணி மதுராந்தக நாச்சியார், புலவர் செவ்வந்தியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.