பதிவு செய்த நாள்
05
ஜூலை
2023
05:07
தாண்டிக்குடி , அரோகரா அரோகரா கோஷத்துடன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டிக்குடி ஸ்ரீ பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று நாள் நடந்த யாகசாலை பூஜை வேத அனுக்கையுடன் துவங்கின. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரவேசபலி, வாஸ்து சாந்தி, மிருத்சங்கீரஹணம், அங்குரார்பனம், ரக்க்ஷாபந்தனம் நடந்தது. இரண்டாம் யாசாலை சாலை பூஜையில் கோ பூஜை, புதிய விக்ரகங்களுக்கு கண் திறத்தல், பூர்ணாகுதி, தீபாதரனை. விக்ரங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலுடன் மூன்றாம் யாகசாலை பூஜையும். நான்காம் கால யாகசாலை பூஜையில் கலசங்கள் புறப்பாடும், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ பாலமுருகன், உட்பட அனைத்து மூர்த்திகளுக்கும், பன்றிமலை சுவாமிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின் மகா அபிஷேகமும், அன்னதானமும் நடந்தன. மாலை திருத்தேரில் முருகன் திருவீதி உலா வருதல் நடந்தது. ஏற்பாடுகளை பாலமுருகன் அறக்கட்டளை மற்றும் தாண்டிக்குடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.