புஞ்சை தாமரைகுளம் மாரியம்மன் மாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2023 03:07
அவிநாசி: அவிநாசி ஒன்றியம்,புஞ்சை தாமரைக் குளம் ஊராட்சியில் ஸ்ரீ மாகாளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி அடுத்த புஞ்சை தாமரைக் குளம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாகாளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கூனம்பட்டி திருமடம் நடராஜ் சுவாமிகள் முன்னிலையில்,வலைய பாளையம் ஆதீனம் குமார் சிவாச்சாரியார் முன்னிலையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 3ம் தேதி மஹாகணபதி,ஸ்ரீலட்சுமி,மகா சங்கல்பம் ஹோமங்களுடன் முதல் கால யாக வேள்வி பூஜைகள் தொடங்கியது.நேற்று முன்தினம் சிவாச்சாரியார்கள் வழிபாடு, திரவய யாகம், கோபுர கலசங்கள் பூஜை செய்து வைத்தல், தீபாராதனையுடன் இரண்டாம் கால யாக வேள்வி பூஜையும், திருமுறை பாராயணம்,அஷ்ட பந்தன மருந்து சாற்றுதலுடன் மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று காலை நான்காம் கால யாக வேள்வி பூஜைகளில் மங்கல இசையுடன் கலசங்கள் புறப்படுதல் மகாதீபாராதனையுடன் ஸ்ரீ மாகாளி அம்மன் ஸ்ரீ மாரியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.