திருப்பூர்: பாரப்பாளையம் ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருப்பூர், பாரப்பாளையம் ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. யாகசாலைகள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தன. இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளுக்கு பின் புனித நீர் குடங்கள் கோயிலை சுற்றி விமானங்களை வந்தடைந்தது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.