விவசாயியும் அவரது மனைவியும் காட்டுவழியாக செல்லும் போது பொற்காசுகள் நிறைந்த பை ஒன்றை கண்டனர். அதனை விவசாயி எடுக்க முயற்சித்த போது அவரது மனைவி ‘ திருடிய தண்ணீரை நல்ல மனிதர் குடிக்க மாட்டார்’ என சொன்னார். அதை கேட்ட அவர், தீய செயலில் இருந்து என்னை காப்பாற்றி விட்டாய் என்றார். எப்போதும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதீர்.