விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2023 03:07
விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விருத்தாசலம் விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் வரும் 23ம் தேதி நடக்கிறது. அதையொட்டி இன்று (13ம் தேதி) காலை 9:00 மணிக்கு விருத்தாம்பிகை சன்னதியில் ஆடிப்பூரவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வெள்ளி கவசத்தில் கொளஞ்சியப்பர் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து தினசரி காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 21ம் தேதி தேரோட்டம், 22ம் தேதி ஸ்படிக பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. 23ம் தேதி முக்கிய நிகழ்வான ஆடிப்பூர திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.