பதிவு செய்த நாள்
14
ஜூலை
2023
03:07
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் திருவைாறு அருகே உள்ள சந்திரன் கோவிலில், சந்திராயன் -3 விண்கலம், நிலாவில் வெற்றிகரமாக நிலை பெற்று ஆய்வை முடிக்க வேண்டி சிறப்பு யாகம், வழிபாடுகள் நடைபெற்றது.
திருவையாறு அருகே திங்களூரில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவரக்கிர பரிகாரத் தலமான சந்திரன் தனி சன்னதியில் மேற்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார். தோஷ நிவர்த்திக்காக இங்குள்ள சந்திரனை கைலாசநாதர் வந்து வழிபட்டதாக ஐதீகம். இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் நிலவில் ஆய்வு செய்திட சந்திராயன் -3 என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலாவில் நிலை பெற்று, ஆய்வு நடத்திட வேண்டி, தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு சார்பில், சந்திரனுக்கு சந்திர பிரதி என்ற சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சந்திரனுக்கு விபூதி, திரவியம் பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டன.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விண்கலம் வெற்றிக்கரமாக ஆய்வை நடத்தி வேண்டும் என பிராத்தினை செய்துக்கொண்டனர்.