பதிவு செய்த நாள்
15
ஜூலை
2023
06:07
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அன்பர்ஸ பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர். பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாரநாகராஜருக்கும், நந்தி பகவானுக்கும் பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், இளநீர் தேன் உட்பட 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகார நந்தீஸ்வரனுக்கும் அதிகார நாகராஜன் சிவனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது ஏற்பாடுகளை டாக்டர் மகாஸ்ரீ ராஜன் செய்திருந்தார். பெரியகுளம் பாலசுப்பிரமணியர், காளஹஸ்தீஸ்வரர், இந்திரன்புரித்தெரு தையல் நாயகி, சிவனேஸ்வரர், வடகரை தையல்நாயகி அம்மன் கோயில்களில் சனி பிரதோஷம் நடந்தது.