Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி அமாவாசையில் முன்னோர்களின் ஆசி ... ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்.. புனித நீராடி வழிபாடு ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசை; தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமானோர் புனித நீராடி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடி அமாவாசை; தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமானோர் புனித நீராடி தரிசனம்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2023
10:07

தேவிபட்டினம்: ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் கடலுக்குள் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், திருமண தடை குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆண்டுதோறும் ஆடி, தை அமாவாசை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசை தினம் என்பதால், நவபாஷாண கடற்கரையில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி நவக்கிரகங்களை சுற்றி வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். நவபாஷாணத்தை நிர்வகித்துவரும் இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் பழனி குமார், உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. செயல் அலுவலர் நாராயணி, எழுத்தர் தங்கவேல் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் பக்தர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar