ஆடிச்செவ்வாய்; அகத்தீஸ்வரர் கோவில் புற்றில் பால் ஊற்றி பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2023 02:07
சென்னை: ஆடி செவ்வாய்கிழமையை முன்னிட்டு, வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள புற்று கோவிலில் பெண்கள் பால் ஊற்றி வழிபட்டனர்.
ஆடி மாதம் பிறந்தாலே அம்மன் கோயில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் ஆடி மாதம் செவ்வாய் கிழமை விழா சிறப்பானது. சுவாமி தரிசனம் செய்ய காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆடி முதல் செவ்வாய்கிழமையான இன்று இக்கோயிலில் அமைந்துள்ள நாகத்தம்மன் கோயில் புற்றில் ஏராளமான பெண்கள் பால், முட்டை ஊற்றியும் குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டியும் தங்கள் தோஷங்கள் நீங்க நாகங்களின் சிலைகளுக்கு பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.