கவுமார மடாலயத்தில் கோடி அர்ச்சனை பெருவிழா: முருகப்பெருமானின் திருத்தொண்டர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2023 01:07
கோவை : சின்னவேடம்பட்டி கவுமார மடாலயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முருகப்பெருமானின் திருத்தொண்டர்கள் பங்கேற்ற கோடி அர்ச்சனை பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவையிலுள்ள பழமையான ஆதீனங்களுள் சிரவை ஆதீனமும் ஒன்று. கோவை சத்தி சாலை சரவணம்பட்டியிலுள்ள, சிரவை ஆதீனம் கவுமார மடாலய மடாதிபதி குமரகுருபர சுவாமிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருகப்பெருமானின் திருத்தொண்டர்களை பங்கேற்க செய்து, கோடிஅர்ச்சனை பெருவிழாவை நடத்துகிறார். இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட முருகப்பெருமானின் திருத்தொண்டர்கள் பங்கேற்ற கோடி அர்ச்சனை பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. கோடி அர்ச்சனை பெருவிழா, ஐந்து நாட்களுக்கு, 22ம் தேதி வரை நடக்கிறது. இன்று காலை 6:30 மணிக்கு போற்றிப்பரவல் பேரொளிவழிபாடு துவங்கி, இரவு 8:00 மணி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து, முருகப்பெருமானின் திருத்தொண்டர்கள் பங்கேற்றனர்.