அன்னூர் பெரிய அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2023 05:07
அன்னூர்: அன்னூர் பெரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அன்னூரில் உள்ள பெரிய அம்மன் கோவில் பல நூறு ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் 53 வது ஆண்டு பொங்கல் விழா நடந்தது. காலை 7:00 மணிக்கு உற்சவமூர்த்தியை, மன்னீஸ்வரர் கோவிலில் இருந்து பெரிய அம்மன் மற்றும் சின்னம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லும் வைபவம் நடந்தது. இதையடுத்து சின்னம்மன் கோவிலில் அபிஷேக பூஜை, தீபாராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு ஆனைமலை கருப்பராயன் கோவிலில் இருந்து, சின்னம்மன் கோவில் வழியாக, மேளதாளத்துடன் பெரிய அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கரகம் எடுத்துச் சென்றனர். இதையடுத்து பெரிய அம்மன் கோவிலில் கணபதி ஹோமம் நடந்தது . இதைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், அம்மனுக்கு அபிஷேக பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை கரியாம்பாளையம் ராக்கியண்ணசாமி கோவிலில் காலை 8:00 மணிக்கு பொங்கல் வைத்தலும், 10:00 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜையும், 11:00 மணிக்கு பூங்கரகம் எடுத்து வரும் வைபவமும் நடக்கிறது.