திருவேடகம் கோவில் திருவிழா; முளைப்பாரி எடுத்து வந்த விஷ்ணு துர்க்கை அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2023 03:07
சோழவந்தான்: திருவேடகம் விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் முளைப்பாரி உற்ஸவம் ஜூலை 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஜூலை 21 திருவிளக்கு பூஜை நடந்தது. 25ல் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, மாவிளக்கு எடுத்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி எடுத்து வரும் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். முளைப்பாரி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். சுவாமி, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா கிடா வெட்டுதல் நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.