ஒத்தக்கால்மண்டபம்: ஒத்தக்கால்மண்டபத்தில், நூற்றாண்டுகளான வினாயகர், 50 ஆண்டுகளான முருகன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களை சீரமைத்து, புதியதாக ரூ.1.75 கோடி மதிப்பில் கற்கோவில்களாக கட்ட, ஊர் மக்கள் முடிவு செய்தனர். இதற்கான கால்கோள் விழா நேற்று காலை, 6:30 மணிக்கு வேள்வி வழிபாடு , திருமுறை விண்ணப்பம் ஆகியவற்றுடன் துவங்கியது. 7.44 முதல், 8:00 மணிக்குள், வினாயகர், முருகனுக்கு கால்கோளை தென்சேரிமலை திருநாவுக்கரசு நந்தவன திருமடத்தின் முத்து சிவராமசாமி அடிகளார் நட்டார், தொடர்ந்து பிரசாதம் வழங்குதல், அடிகளார் அருளுரை, நன்கொடையாளர்களுக்கு சிறப்பு செய்தல் நடந்தன. திரளானோர் பங்கேற்றனர்.