ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆடி சுவாதி நாளான நேற்று கருட பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஆழ்வார்குறிச்சி கீழகிராமத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் நடந்த ஆடி சுவாதி பூஜையில், கருட பகவானுக்கு சிறப்பு ஜெபம் மற்றும் திருமஞ்சனம் நடந்தது. பின்னர் கருட பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோயில் அர்ச்சகர் சம்பத்குமார் சிறப்பு பூஜைகளை நடத்தினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.