பதிவு செய்த நாள்
28
ஜூலை
2023
12:07
வந்தவாசி: உலக நன்மைக்காக சாலையில் ஊர்ந்தபடி, ராமேஸ்வரத்துக்கு யாத்திரை செல்லும் மூவர், வந்தவாசி வந்தனர். மத்திய பிரதேச மாநிலம் கங்காப்பூரில், கோலோ கோதாம் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தை சேர்ந்த மூன்று சீடர்கள், உலக நன்மைக்காக சாலையில் ஊர்ந்தபடி, ராமேஸ்வரம் வரை யாத்திரை செல்ல முடிவு செய்தனர். கடந்த ஆண்டு ஜூன், 29-ம் தேதி தொடங்கினர். தெர்மாகோல் அட்டை மீது படுத்து ஊர்ந்தபடி ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில், நேற்று ஊர்ந்தபடி சென்றனர். இதைக் கண்ட மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ‘ம.பி.,யில் இருந்து ராமேஸ்வரம் வரை, 4,000 கி.மீ., துாரத்தை, தெர்மாகோல் அட்டையில் படுத்து ஊர்ந்தபடி நமஸ்காரம் செய்தபடி செல்கிறோம். தினமும், 10 கி.மீ., வரை பயணிக்கிறோம்’ என்றும் தெரிவித்தனர்.